இவரைப்பற்றிச் செய்தித்தாட்களிலும் முகநூல் பதிவுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
அதேநேரத்தில் இல. கணேசன் ஒருசெய்தியைக் கூறியிருந்தார்.அஃதாவது,"1948ல் ஆர்.எசு.எசு அமைப்புத் தடைசெய்யப்பட்டதற்கு எதிராகப் போராடி சிறைசென்றார்,"என்பதாகும். இச்செய்தி என்னுள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது.
கீழடி ஆய்வு தொடங்குவதற்கு முன்பே இவர் சங்ககாலம் பற்றிய ஆண்டுக் கணிப்பைக் கி.மு 3ஆம் நூற்றாண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் தொல்லியல் ஆய்வாளர் ராசன் போன்றோரது கண்டுபிடிப்புகளை ஒட்டிச் சங்ககாலத்தை கி.மு 6ஆம் நூற்றாண்டு தொடங்குவதாக அறிவிக்க வேண்டும் என்றபோது கி.மு 4ஆம் நூற்றாண்டைப் போனால் போகிறது என்று ஏற்றுக்கொண்டவர்.
கோம்பைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகத் தமிழுக்குச் சொந்த எழுத்து இருந்ததில்லை. பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் தோற்றம் பெற்றதாகக் கூறிவந்தார்.
ஆனால் மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் மொழியியல் அடிப்படையில் ஐராவதம்மகாதேவன் போன்றோர் கருத்திற்குத் தகுந்த மறுப்பு வழங்கியும் அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கோம்பைக்கல்வெட்டைப் பார்த்துவிட்டே தமிழி என்றொரு எழுத்துவகையுண்டு எனவும் அஃதே காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து என்றும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டதுடன் தாம் சிந்துவெளி ஆய்வில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
அதுமுதல் சிந்துவெளி ஆய்வில் தனிக்கவனம் செலுத்திய அவர் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் திராவிடமொழிகளோடு ஒத்திருப்பதாகக் கூறிவந்தார். திராவிடம் என்றோ ஆரியம் என்றோ தனி மொழிகள் இருந்ததற்கான தடயத்தை இதுவரை மொழியியலாளர் கூடக் கண்டறிந்திருக்கவில்லை. வெள்ளைக்காரர்கள் இங்கிருந்த சமற்கிருத வெறிபிடித்த பிராமணர்கள் மூலமாகத் திராவிடம், ஆரியம் என்னும் சொற்களைப்பெற்று அவற்றிற்கு மொழிமூலம் கற்பித்து மொழியியலுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்தனர். அதனால் மன்னராட்சிக் காலத்தில் இருந்த செல்வாக்கினும் தமிழுக்கான செல்வாக்குக் குறையத் தொடங்கியது. தமிழுக்கு மூலமொழி ஒன்று இருந்தது அது திராவிடமாகலாம் என்பது கால்டுவெல்லின் கூற்று. இக்கூற்று இன்றுவரை தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளை முன்னுக்குக் கொண்டுவர உதவுகிறது. ஆய்வு என்ற பெயரில் இல்லாத ஒரு மொழிக்குத் திராவிடம் எனப்பெயர் சூட்டி உலாவரவிட்டதை ஏற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவன் சிந்துவெளியிலும் திராவிடக் கருத்தியலுக்கு மொழிவடிவம் தந்துள்ளார். அதேவேளையில் "சிந்துவெளியில் முந்து தமிழ்" எனும் நூலுள் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் தமிழி எழுத்தே என்பதைத் துல்லியமாகப் பூர்ணசந்திரசீவா எழுதியுள்ளார். இருந்தும் ஐராவதம்மகாதேவன் திராவிடத்தை விட்டு வெளியே வந்தாரில்லை.இந்தியாவின் இ.ஆ. ப க்கள் தங்களை இந்தியத்திலிருந்து விடுவித்துக்கொள்ள விரும்பியதில்லை. அதன் ஆரியத்திற்கு எதிராகத் திராவிடத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழின் இருப்பை அழிக்கும் வேலை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னின்றவரே ஐராவதம் மகாதேவன் ஆவார். இதற்காக என்னைத் திட்டித் தீர்ப்பவர்கள் ஆசை அடங்கும்வரைத் திட்டித் தீர்க்லாம். எனக்கு வருத்தம் தோன்றாது.
ஆர். எசு. எசு இயக்கம் மதவாத இயக்கமன்று அஃது இந்தியத் தேசிய இயக்கமே என்பவர்கள்தாம் இந்துத்துவாவின் ஏற்பாளர்கள். இப்பெயருக்கெல்லாம் அப்பாற்பட்டவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் இ.ஆ.ப க்களில் பெரும்பாலோர் சாதிவேறுபாடில்லாமல் இந்துத்துவாவினரே. அந்த வகையைச்சேர்ந்தவரே ஐராவதம் மகாதேவன் என்பது எனது கருத்தாகும்.