நான் திமுக வினரை விமர்சனம் செய்து பதிவிட்டது யாருக்கு உறுத்துகிறதோ இல்லையோ சிபிஎம் மினருக்கு எரிகிறது. தோழர் முகமது சிராஜூதீன் என் பதிவிற்கு ஒரு கவிதை பின்னூட்டமிடுகிறார். என்னவென்று "பிரபாகரன் ஒரு நாய்" என்று...
அவருக்கு எவ்வளவு காழ்ப்புணர்வு, வன்மம், குரூரம் இருந்தால் இப்படி எழுதுவார். ஒருவரை கொள்கை ரீதியாக தாக்குவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் தாக்குவது வேறு. சிராஜூதீன் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்.
அவர் ஏற்கனவே "காத்தான்குடி இஸ்லாமியர் படுகொலை" குறித்து எழுதியபோதே பொதுவாக சிறு விமர்சனம் ஒன்றை நிலைத்தகவலாக பதிவு செய்தேன். அதற்கு மதுரை இரவிக்குமார் (ஸ்ரீ ரசா) பின்னூட்டம் ஒன்றை இட்டார். உங்களால் மறுக்க முடிந்தால் மறுங்கள் என்று எழுதியிருந்தார்.
நான் அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றேன். காரணம் கம்யூனிச தோழமைச் சக்திகளை அளவுக்கு மீறி விமர்சனம் செய்வது சரியானதாக இருக்காது என்று நினைத்தேன்.
என்னால் அதற்கு பதிலளிக்க முடியாமல் அல்ல. எதிரி பலமானவனாக இருக்கும் போது நாம் தோழமைச் சக்திகளுடன் விமர்சனம் என்ற பெயரில் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கருதியே.
ஆனால் சிராஜூதீன் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு விமர்சனம் செய்துள்ளார். இனிமேலும் எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்தால் அது எங்களை நாங்களே இழிவு படுத்திக் கொள்வதாகும்.
கொள்கை விமர்சனம் என்று வந்து விட்டால் நண்பன் எதிரி என்று நான் பார்ப்பதில்லை. எனக்கு சரி என்ற வகையிலேயே விமர்சனங்களை முன்வைப்பவன்.
அவ் வகையிலேயே கூறுகிறேன் "பிரபாகரனை பாசிஸ்ட் " என்றும் 'நாய்' என்றும் கூறுகிற தகுதி சிபிஎம் முக்கு இருக்கிறதா? ஆர். எஸ்.எஸ் சுக்கு இணையாக இந்தியாவை காப்பாற்றத் துடிப்பவர்கள் பாசிஸ்டுகள் அல்லாமல் வேறென்ன?
நந்திகிராம் படு கொலைகள்தான் சிபிஎம்மின் அரசு பாசிசத்தையும், கட்சி பாசிசத்தையும் ஒரு சேர வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பின்புதான் மேற்கு வங்கத்தில் சிபிஎம் தூக்கி எறியப்பட்டது. அதே பாசிசத்தனமான நடவடிக்கைதான் தமிழ்நாட்டிலும் சிபிஎம் செய்கிறது. என்ன கருத்தியல் பாசிசமாகவே இது பெரும்பாலும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கார்தான் பிரபாகரனை நாய் என்கிறார். பாசிஸ்டுகள் எப்போதும் பிறரை பாசிஸ்ட்டுகள் என்பார்கள். அதன் தப்பாத பிரதிநிதியாக சிபிஎம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக