நியூட்ரினோ :
ஒரு தீர்வற்ற பணத்தை பாழடிக்கும் ஆய்வு மற்றும் மனிதகுலப் பேரழிவு !
அறிவியல் ஆய்வு எனும் பெயரில் நியூட்ரினோ திட்டத்தால் நிலமும் நீரும் மின்சாரமும் நிதியும் பாழ்பட்டுப் போவது மட்டுமல்ல; மனித குலத்துக்கே பேரழிவு ஏற்படுத்தப் போவதன் அறிகுறி என்பதை அறிவியல்பூர்வமாக இதைக் குறித்து விளக்கியிருக்கிறார் தோழர் பார்த்திபன் அவர்கள். அவரது கட்டுரை பின்வருமாறு:
சுருக்கம்:
நாம் நினைத்துக்கூட பார்க்கவியலாத இந்த பேரண்டத்தின் விண்மீன்களிலிருந்தும் சூரியனிலிருந்தும் வெளிப்படும் மிக நுண்ணிய துகள்தான் இந்த நியூட்ரினோ. இதன் எடை மிகவும் சிறியது மற்றும் கணக்கில் கொள்ளக்கூடியதுமல்ல. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கிலோ அதாவது 1000 கிராம் சர்க்கரை வாங்குவதாகக்கொண்டால், அதில் ஒரேயொரு கிராம் சர்க்கரை எவ்வளவு இருக்கும்? சுமார் பத்தாயிரம் சர்கரைத்துகள்கள் இருக்கும் என்று தோராயமாக வைத்துக்கொண்டால்; அதே ஒரு கிராம் அளவுள்ள இந்த நியூட்ரினோ எனும் துகள் பல்லாயிரங்கோடிகள் இருக்கும் என்று பொருள்.
இப்பொழுது சொல்லுங்கள் இந்த நியூட்ரினோ துகளின் எடையை பார்ப்போம்? ஏறத்தாழ எடையற்ற தன்மையை கொண்ட அதே நேரத்தில் இந்த உலகிலேயே மிக குறைந்த எடையை கொண்ட துகள் இதுதான் என்க.
இந்த ஆராய்ச்சியின் அவசியமென்ன?
நியூட்ரினோ என்பது ஒளி வேகத்தில் பயணிக்கக்கூடியது அதாவது நொடிக்கு 30 கோடி மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்று பொருள். ஒளி என்றதும் உங்களுக்கு சூரிய ஒளி நினைவிற்கு வருவது இயல்பு. சங்க காலத்தில் சூரியனின் நிழலையும் அதன் கோணங்களில் ஏற்படும் போக்கையும் கணித்து பருவ நிலைகளை நம்முடைய பாட்டன்மார்கள் அறிந்துகொண்டார்களாம். பிறகுதான் மணற்கடியாரமும் வந்தது. சரி சூரிய ஒளி என்றதும் நமக்கு வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்கிற பழமொழியும் வருகிறதல்லவா? அதாவது ஒரு டார்ச்சிலிருந்து புறப்படும் ஒளியாகட்டும் அல்லது சூரிய ஒளியாகட்டும்; ஒளி ஒருபோதும் கடினமான அதாவது சுவர் மரம் பாறை மலை போன்றவைகளைதாண்டி ஊடுறுவதில்லை என்பதை பசுமரத்தாணிபோல் பதிக. ஆனால் நமக்கு ஆல்பா பீட்டா காமா கதிர்களை தெரியும் அதனூடே காஸ்மிக் கதிர்களையும் தெரியும். ஆல்பா பீட்டா காமா கதிர்களை அளக்கமுடியும். ஆனால் இந்த காஸ்மிக் கதிர்களை அளக்கவும் முடியாது கண்டறியவும் முடியாது. ஏறத்தாழ இதே சூழலைக்கொண்டதுதான் நியூட்ரினோ துகள்.
கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய உடலில் புகுந்து ஊடுருவி செல்கின்றன இன்னும் சொல்லப்போனால் இந்த பூமி கிரகத்தின் மறுபக்கத்தையே சென்றடைகின்றன என்றால் அதன் ஊடுறுவல் சக்தியையும் வேகத்தையும் சற்றே நினைத்துப்பாருங்கள்! இதை மட்டும் கண்டறிந்துவிட்டால் பூமிப்பந்து மட்டுமல்ல பல கோள்களை பற்றிய இரகசியங்களையும் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும் என்பதுதான் இந்த உலகளாவிய ஆய்வின் நோக்கம். இது மேற்குலக நாடுகளுக்கு சாத்தியம்; மேலும் ஆய்வு நடத்தி அதன் உண்மைத்தன்மைகளை திருடிக்கொண்டு; நம்முடைய மண்ணையும் நீரையும் நிலத்தையும் மக்களையும் நாசம் செய்துவிட்டு, வெள்ளைகாரன் ஓடிவிடுவான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும். ஆனால் ஒரு ஏடிஎம் மெழினையே பாதுகாக்க துப்பில்லாத மற்றும் ஆதார் அட்டையில் ஆட்டு தலைகளை ஒட்டி கொடுக்கும் நமக்கு, இதுபோன்ற ஆய்வுகள் தேவையா? அல்லது முதலில் சாத்தியமா? யாருடைய பணத்தில்? என்பதே இங்கு கேள்வி.
ஆனால் இதனுடன் காஸ்மிக் கதிரும் பயணிப்பதால் எது நியூட்ரினோ எது காஸ்மிக் எனும் குழப்பத்தில் இருந்து இன்னும் விஞானிகள் தெளிவாகாத சூழலில்தான் 1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார் இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனாலும் நியூட்ரினோ ஆய்வு இன்னும் உலகில் எங்கும் நிறைவுபெறவில்லை காரணம் அது அத்தனை எளிதல்ல. பூமியின் மேற்பரப்பில் இத்தகைய ஆய்வு பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும் என்பதால் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை அமெரிக்கா அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸோ 2,500 மீட்டர் கடலுக்கடியில் ஆய்வகத்தை நிறுவியுள்ளது. ஆனால் உலகமே அஞ்சும் இந்த சோதனையை தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில் நிலத்துக்கும் கீழே சுமார் 1.7 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர் என்பதுடன் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகம் என்க.
ஆனால் இங்கே இந்தியாவைப் பொறுத்தவரை 1965 ஆம் ஆண்டு கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2 கிலோ மீட்டர் (2000 மீட்டர்)ஆழத்தில் நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது; ஆனாலும் அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஆய்வகம் ஏன் மூடப்பட்டது என்பதற்கு அரசிடம் எந்த பதிலும் இல்லாத நிலையில்தான் இந்த புதிய பேரழிவுத்திட்டம் என்க.
திட்ட விளக்கம்:
ஆய்வகத்தை அணுக:
மதுரை to தேனி நகரம் (NH 44) 80 கி மீ
தேனி நகரம் to போடிநாயக்கனூர் (NH 44) 15 கி மீ
போடிநாயக்கனூர் to ரசிங்கபுரம் (SH100) 10 கி மீ
ரசிங்கபுரம் to டி புதுக்கோட்டை (ODR) 8 கி மீ
டி புதுக்கோட்டை to நியூட்ரினோ ஆய்வகம் 2 கி மீ
மொத்தம் 115 கி மீ தொலைவு
குறிப்பு:
NH - தேசிய நெடுஞசாலை
SH - மாநில நெடுஞசாலை
ODR - இதர மாவட்ட சாலைகள்
பூமியின் ஒருபுறத்தில் நுழைந்து அடுத்தபுறத்தில் ஊடுருவும் சக்தியும் வேகத்தையும் பெற்றிருக்கும் நியூட்ரினோ எனும் அதிவேக துகள், தேனி மாவட்டத்தில் உள்ள கடினப்பறைகளில் கட்டுப்படும்(எவ்வளவு பெரிய அறிவாளிகள்/ ஏமாற்றுப்பேர்வழிகள் பாருங்கள்) என்பதால், இந்தப்பகுதியை தெரிவுசெய்தோம் என்கிறார்கள் விஞ்ஞானிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியலாளர்கள்; அதனால் சுமார் 120 ஆண்டுகள் செயல்படக்கூடிய இந்த ஆய்வகத்திற்கு இந்திய அணுசக்தி கழகம் சுமார் 1500 கோடி ருபாய் திட்ட மதிப்பில் ஒப்புதல் அளித்துள்ளது. 1980 களில் தொடங்கி பல்வேறு ஒப்புதல்கள், நிராகரித்தல்கள் மீண்டும் ஒப்புதல்கள் என பட்டியல் நீள்வதால் ஒட்டுமொத்த ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளே இதற்கு காரணமாகின்றன என்பதால் நேராக உங்களை திட்டத்திற்குள் அழைத்துச்செல்கிறேன்.
பொட்டிபுர மலை உச்சியில் இருந்து சுமார் 1750 ஆடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டுவது; அதாவது 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து இந்த ஆய்வுகூடத்தை அமைக்க இருக்கிறார்கள். ICAL- Magnetized Iron Calorimeter detector எனும் செயற்கையாக உருவாக்கப்படும் மின்காந்த உணர்த்தி கருவியை இந்த ஆய்வகத்தினுள் பொறுத்த இருக்கிறார்கள்; இதன் எடை உலகிலேயே மிகப்பெரிய ஆய்வக அளவிலான “ஐம்பத்துநான்காயிரம் டன்கள்” என்றால் நினைத்துப்பாருங்கள். உலகின் மிகச்சிறிய நியூட்ரினோ இத்தாலிய கிரான் காசோ ஆய்வகத்தின் சோதனைகளால் அந்தப்பகுதிகளில் உள்ள நீரடுக்குகளையும் பாழானது மட்டுமன்றி குடிநீரையும் பாழடித்ததையும் அந்தப்பகுதியே வாழ்வதற்கு ஏற்றதல்ல என்று மக்களால் புறக்கணித்ததையும் இந்த உலகம் நன்கறியும். அத்துடன் அங்குள்ள இத்தாலிய மக்களும் அறிவியலாளர்களும் விவசாயிகளும் சாமானியர்களும் அரசு ஊழியர்களும் ஒன்றுகூடி எதிர்த்ததன் விளைவாக 2011 ஆண்டு மூடப்பட்டு பின்பு பலப்பல ஒப்புதல்களின் பேரில் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்கத்தொடங்கியது.
Magnetized Iron Calorimeter detector - ICAL Detector :
இது அசையாத்தன்மை கொண்ட அதிக எடையுள்ள மின்தேக்கிகள் போன்று செயல்பட மற்றும் நியூட்ரினோ துகள்களை சேகரிக்க ஏதுவாகவும்; ஒரு வலுவான செயற்கை முறை மின் காந்தப்புலம் கொண்ட மூன்று தொகுதிகளைக்கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் 16 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் 54 மில்லி மீட்டர் மொத்தமும் கொண்ட இரும்பு தட்டுகள், RPC எனப்படும் glass resistive Plate Chamber மூலம் ஏறத்தாழ ஒரு பர்கர் கேக் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு மீடியத்திற்கும் அதாவது RPC க்கு இடையில் மேலும் கீழும் 54 மில்லி மீட்டர் மொத்தம் கொண்ட இரும்பு தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். மூன்று தொகுதிகளின் இரும்பு மற்றும் RPC அமைப்புகளின் மொத்த எடை 54,000 டன்கள்.
இது எண்பதாயிரம் ஆம்பியர்(80,000A) கரண்டையும் 4.5 (3 X 1.5 Tesla) டெஸ்லா மின்காந்த புல அடர்த்தியையும் உருவாக்கவல்ல 150 டன்கள் எடைகொண்ட காப்பர் காயிலைக்கொண்டு நிறுவப்படவிருக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சத மின்காந்த உணர்த்தி ஆகும். மூன்று தொகுதிகளும் அடுத்தடுத்து இணைக்கப்பட்டிருப்பதால் இதன் மொத்த அளவு 48 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் ஆகும். இது வெறும் மின்காந்த உணர்த்திக்கான இடம் மட்டுமே என்க.
16மீட்டர் நீளம் 16 மீட்டர் அகலம் 56 மில்லி மீட்டர் அடர்த்தி என சுமார் 168 இரும்பு தட்டுகள் குஜராத்திலில் இருக்கும் ESSAR நிறுவனம் உற்பத்தி செய்து அனுப்புகிறது. இதனுடன் காப்பர் காயிலை ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் மூலம் அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. பல அச்சுகள் கொண்ட தாழ்ந்த ட்ரைலர் (multiple axis low bed trailer) மூலம் சிறப்பு பரிணாம சுமை ஒப்புதல் பெற்று (அதாவது ODC - over dimensional consignment approval என்று பொருள்) 8 plates in 32 ton trailer/trip என்கிற முறையில் சாலைவழியே அனுப்பப்படுகிறது.
நிலம்:
ஏறத்தாழ 57 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பொட்டிபுரம் திட்ட Survey No. 4/1 போதுமானது என கருதி ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த நிலம் குகை அமைக்க ஆய்வக மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு, தொழிலாளர்கள் தங்குவதற்கு இருப்பிடம், விருந்தினர் மாளிகை அமைக்க மற்றும் போக்குவரத்து கட்டுமான பொருள்களை சேமிக்க, ஒப்பந்ததாரர் அவர்களுடைய இருப்பிடங்களை தற்காலிகமாக கட்டுமானம் முடியும்வரை கட்டிக்கொள்ள என எல்லாவற்றிக்கும் சேர்த்தே ஆகும். கழிவுகளை சேமிக்கவும் இந்த இடத்தில் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மலையடிவாரம் என்பதால் ஆய்வக போக்குவரத்து எளிமையாகிறது என்கிறார்கள்.
தண்ணீர் :
இந்தப்பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர் பஞ்சம் என்பதால் 15 கிலோமீட்டர் அருகில் இருக்கும் முல்லைப்பெரியாற்றிலிருந்து தருவதாக தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் (TWAD -Tamil Nadu water supply and Drainage Board) ஒப்புதல் வழங்கியுள்ளது. கட்டுமானத்தின்போது ஒரு நாளைக்கு பத்தாயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. இந்த ஆய்வக இயக்கம் மற்றும் மனித தேவைகளுக்காக ஒரு நீர்த்தேக்க தொட்டியை கட்டவிருக்கிறார்கள் அதன் கொள்ளளவு 400 ஆயிரம் லிட்டர் ஆகும்.
சுமார் ஐந்து ஆண்டுகள் (வேலை நடைபெறும் நாட்கள் மட்டும் 5 ஆண்டுகள் என்று கணக்கில்கொள்ளபட்டுள்ளது) இந்த திட்டம் முடிவடையம் காலம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைய தண்ணீர் தேவை சுமார் பத்தாயிரம் லிட்டர் என்க. அப்படியானால் ஒரு கொடியே எண்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்(365 X 10000 X 5 = 1,82,50,000 liter) தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது 18,250 cu.m/ 5 years என்று பொருள். இதற்கு பிறகு சுமார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது அதை கணக்கிடுவோமா?
காப்பர் காயில் கூலிங், கட்டுப்பட்டு அரை கூலிங், மனிதர்கள் கூலிங், தனிமனித பயன்பாடு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தண்ணீர் இழப்பு, சிதறுதல் மூலம் என ஒரு நாளைக்கு சுமார் 30, 000 லிட்டர் தண்ணீர் தேவை (நிச்சயமாக இதைவிட 10% அதிகம் தேவைப்படும் என்க ) என்று வைத்துக்கொண்டால் 100 ஆண்டுகளுக்கான தண்ணீர் 109 கோடியே அய்ம்பது இலட்சம் (30000 X 365 X 100 = 109, 50, 00,000 liter)லிட்டர் அதாவது 10,95,000 cu.m/100 years(109, 50, 00,000/1000) அதாவது சுமார் 110 கோடி லிட்டர் தண்ணீர் என்று பொருள். இது பார்ப்பதற்கு சிறிய அளவுபோல் தெரிந்தாலும் சுரக்கவும் இறைக்கவும் சமமானது ஆதலால் விவசாயம் அழிவது உறுதி என்க!
மின்சாரம்:
1. குகைக்குள் தேவைப்படும் அளவு 1500 KW
2. மேற்பரப்பில் தேவைப்படும் அளவு 2500 KW
மொத்தம் 4000 KW இது மேலும் உயரும் என்பதால் 5000 KW ஆக கணக்கில் கொள்ளப்பட்டு 5 MVA, 110/11KV முதன்மை துணைமின் நிலையங்களை அமைக்கவும் மூன்று 2000 KVA, 11/0.433KV துணை மின் நிலையங்களை அமைக்கவும் திட்டம் வரைவு பெறப்பட்டுள்ளது.
மாதிரி மின்சார கணக்கீடு:
Proposed power required : 4000 KVA
Operating efficiency : 95%
% loading : @70% (assumed)
Power factor : 0.8 lag
(Assumed
post compensation pf as 0.95 lag)
Contract demand : 5000KVA
Chargeable demand : 3750KVA
(Payable charge only @ 75% on contract demand)
Tariff : MD Tariff (KVA + Kwh)
Cost /KVA (Max. demand) : Rs. 350/KVA
Total MD cost/Annum : Rs.1, 57, 50,000/- ------------ (i)
Actual Loading : 2527KW
(4000 X 0.95 X 0.95 X 0.7)
Total average units/Annum : 22,136,520 Kwh
(8760 X 2527)
Cost/ unit : Rs. 5.5/-
Total unit cost/ annum : Rs. 12, 17, 50,860/- ------------ (II)
MD + Unit Cost : Add (I) + (II)
Total electricity cost/ annum: Rs.13, 75, 00,860/-
Say apprx. Electricity cost : 14 Crore/ Annum INR --------- (III)
(தவிற்க முடியாத காரணத்தால் ஆங்கிலம் பயன்படுத்தபட்டுள்ளது பொறுத்தருள்க)
D - வடிவ சுரங்கம்:
800 முதல் 1000 டன் எடையுள்ள கடினப்பாறைகளின் அடர்த்தி பொதுவாக 1600 லிருந்து 3500 கிலோ/ கனமீட்டர் என்கிற அளவில் இருக்கும்; அதாவது பத்தாயிரம் முதல் 22 ஆயிரம் கன அடி அல்லது 285 முதல் 625 கன மீட்டர் பரப்பளவை குடைந்தெடுத்து சுரங்கம் அமைக்க வேண்டும் அதுவும் மலையின் 1750 மீட்டர் அடிப்பகுதி ஆழத்தில் என்றால் சற்று நினைத்துப்பாருங்கள். இதற்கு சுமார் 800 முதல் 1000 டன் வெடிபொருள் பயன்படுத்தி சமமான இடைவெளியில் வெடிக்கச்செய்து பாறை துகள்களை அப்புறப்படுத்தப்படவேண்டும். இதனால் ஏற்படும் அதிர்வு அலைகளின் மூலம் அருகில் இருக்கும் கட்டிடங்கள் அது அணைக்கட்டுகளே ஆனாலும் விரிசல் விடப்போவது உறுதி. இதனால் ஏற்படும் வெடிமருந்து விஷக்காற்று மற்றும் எளிதில் படியாத காற்றுடன் கலந்து மிதக்கும் நச்சு துகள்கள் அந்த பகுதியையே மாசுபடுத்தப்போவது உறுதி.
அதுமட்டுமல்ல அந்த வெடி சத்தத்தில் அங்கே வாழும் அனைத்து உயிரினங்களின் நிலையை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். மனித சாதாரண சராசரி உலகால் உறுதி செய்யப்பட்ட சத்தம் வெறும் 80 டெசிபல் மட்டுமே. டெல்லி பம்பாய் போன்ற மாநகரங்களில் 90 டெசிபெல் முதல் 100 டெசிபெல் வரை மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நியூட்ரினோ ஜெலட்டின் வெடி மூலம் பிளக்கப்படும் பாறை மற்றும் வெடி சத்தத்தின் அளவு சுமார் 200 முதல் 300 டெசிபல் இருக்கும் என்றால் மீதியை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இவ்வளவு சத்ததிதில் மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது என்பது நிதர்சனம். இந்த திட்டம் தொடங்கியபோது 1500 கோடி என்று மதிப்பிடப்பட்டது ஆனால் இது முடிவுறும் நிலையில் சுமார் பத்தாயிரம் கோடியை தாண்டும் மற்றும் 120 ஆண்டுகளுக்காவுக்கான பராமரிப்பு செலவும் கூடிவிடும் என்க.
இனி நமது ஐயங்கள் பின்வருமாறு.........
1. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுகள் தொடரும் அணுக்கழிவையே பாதுகாக்க முடியாத மற்றும் அதை பரம ரகசியமாகவே வைத்திருக்கும் நாம் எப்படி இந்த ஆபத்து மிகுந்த நியூட்ரினோ ஆய்வை தொடரப்போகிறோம்? எந்த ஒரு இம்மாதிரியான திட்டத்தையும் மக்களிடம் விவாதிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் சரி என்று ஒப்புதல் அளித்தால் ஒழிய எப்படி தொடங்குவது மேலும் அது சட்ட விரோதமல்லவா?
2. Drill jumbos, Air compressors, Mobile cranes, Tippers, Pump trucks, Jack hammers, Road rollers, Gas welding units, Dewatering pumps with motors, Excavators/Loaders/backhoes, Pneumatic rock drills, Shotcreting machine, Grout pumps, Dozers, Batch plant, Ventilation fans மற்றும் Hand winches என எல்லாவகையான இயந்திரங்களும் இந்த திட்டம் முடிவடையும்வரை தொடர்ந்து சமமான இடைவெளிவிட்டு தொடர்ந்து மாற்றி மாற்றி இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது; எவ்வளவு சத்தம், சாலை விபத்துகள், சாலையில் நெரிசல்கள், சுவாசக்காற்றில் மாசு என இந்த இடமே கிட்டத்தட்ட ஒரு புழுதிப்புயல் போன்று பெருத்த சத்தத்துடன் காணப்படும்.
3. இவ்வளவு மலையளவு பிளக்கப்பட்ட பாறைத்துகள்களை எப்படி எங்கு நிரப்பப்போகிறீர்கள் அதன் உயரம் என்ன? மேலும் இது சுரங்கம் தோண்டும் பணிக்கு நேர் எதிரானது என்பதால், தோண்டப்பட்ட மண்ணை பாறைத்துகள்களை பாறைத்துண்டுகளை எப்படி படியவைக்கப்போகிறீர்கள்? அதன் அழுத்தம் என்ன?
4. இவ்வளவு கோடிக்கணக்கில் மின்சாரத்தை நூறு ஆண்டுகளுக்கு வீணடிப்பது ஏற்புடையதா? ஆம் என்றால் எதனடிப்படையில் யாருக்காக? ஒருவேளை திட்டம் வெற்றிபெற்றுவிட்டால் அதன் உரிமம் யாருடையது? மேலும் அதை வைத்து அடுத்தடுத்த வேற்றுகிரக ஆய்வை நடத்தும் அளவிற்கு இந்திய விண்வெளிக்கழகம் தகுதிபெற்றுவிட்டதா? யாரை ஏமாற்ற மக்கள் பணத்தை பாழடிக்கும் ஆபத்து மிகுந்த இந்த நாடகம்?
5. விவசாயிகள் தண்ணீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் ஒருபுறம் அம்மணமாக போராடுகிறார்கள், இந்நிலையில் நூறு வருடத்திற்கு இவ்வளவு தண்ணீரை பாழடிப்பது தகுமா?
6. சுரங்கத்தினுள் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் வெறும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் அவசர மின்சாரம் வரவேண்டும்; அதன்மூலம் காற்று மீண்டும் நிரப்பப்படவேண்டும் மற்றும் வெவ்வேறு கூலிங் சாதனங்களை இயக்கப்படவேண்டும்; குறிப்பாக ICAL குளிர்விக்கப்படவேண்டும் இல்லையேல் வெடிப்பது உறுதி. உள்ளே இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்க.
7. உலகமே தடை செய்யப்பட்ட வாயுக்களை காப்பர் காயிலை குளிர்விக்க பயன்படுத்தவேண்டி பயன்படுத்தப்படப்போகிறீர்கள். அந்த ஆபத்து நிறைந்த வாயுக்களை சுமார் 200 பார் (200 Kg/sq.cm) அழுத்தத்தில் சிலிண்டர்கள் மூலம் சேமிக்கவுள்ளீர்கள். இதற்கான ஆபத்துக்கால பயிற்சி பற்றிய அறிவுறுத்தல்களை அந்தப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டதா?
8. இந்த ஆய்வு முடிவுகளை கண்காணிக்கப்பபோகிற நிறுவனம் எது? முடிவுகள் எவ்வளவு பாதுகாப்பு உறுதித்தன்மை நிறைந்தது? அப்படியெனில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு இதில் என்ன விழுக்காடு மற்றும் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கும்?
9. இந்த திட்டத்தின் மூலம் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது மட்டுமன்றி அதையும் பெருநிறுவனங்களே குத்தகை எடுத்துக்கொள்ளும் மின்சாரம் உள்பட என்றால்; இதில் நமக்கு என்ன பயன்?
10. இவ்வளவு நிலத்தடி நீரை இயற்கையை மண்ணை வளங்களை உயிரினங்களை கட்டிடங்களை காற்றை மாசுபடுத்தப்போகும் உங்களின் கார்பன் உமிழ்வின் (carbon credit) அளவு மற்றும் அதை சமன் செய்யும் மாற்று திட்டம் என்ன?
இன்னமும் கேட்பேன்.....
தோழமையுடன்,
பார்த்திபன் ப
20/05/2018