தூரத்தில் இருந்து
உன்னை ரசிக்க மட்டுமே முடியும்.
வேறு என்னதான்
என்னால் செய்ய முடியும்?
நிலவு காட்டி அமுதூட்டும் தாய்போல
என் பிள்ளைகளுக்கு
உன்னைக் காட்டத்தான் முடியும்!
கவி எழுதும் கைகளுக்கு
வைரக் கணையாழியாய்
இப்பாவை எழுதும் இப் பாவை
இப்பாவை எழுதும் இப் பாவை
சமர்ப்பிக்கிறேன்!
- கலையரசி ஞானதீபம்