செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழ்த்தேன் : கவிதை : கோ. பாலக்கிருட்டிணன்

தமிழ்த்தேன்

உன்னில் இருக்கும்
உயிர் உருக்கும் சுவை
உலகில் உனக்கு
இணை எவை?

பொங்கி வழியும் அமிழ்தத்தில்
பொங்கிய குமிழே!
பொங்கலுக்கே இனிக்கும்
பொன் தமிழே!

அறுசுவை என்றாலும் – அதில்
ஒரு சுவையாய் கசப்பிருக்கு.
முத்தமிழ் என்றால் – இதில்
முக்கனியின் சுவை இருக்கு.

நற்சுவை கசியும் கரும்பிருக்கு
நா நக்கும் தேனிருக்கு – தமிழே
நீ இருக்க இதெல்லாம் ஏனிருக்கு?
வேறெதற்கு?
உயிரிருக்கும் உன் சுவையைச்
சுட்டிக் காட்டுதற்கு.

பல மொழிக்கும் குரு மொழியாய்
திருவுக்கும் பொருள் தருவாய்.
தேனால் சொல்லும் மொழியாவாய்
தேனில் செல்லும் திரு நாவாய்!

கிளைமொழிகள் படைத்தத்
தலைமொழியே!
உன்னைக் கற்றால்
செழிக்கும் தலைமுறையே.

உலகில் உதித்த
முதல்மொழியே!
உன் இடத்தை நிரப்ப
வழி இல்லையே.

கலகலப்பும் பளபளப்பும்
உன்னைப் பார்த்துக்
கலகலக்கும்.

விண்ணைப் பார்த்து
தமிழென்றால்,
வெள்ளிக்கோளும்
துள்ளி ஆடும்.

தமிழே வாழ்க!
தமிழரால் வாழ்க!!
            
       கோ. பாலக்கிருட்டிணன்
        11ஆம் வகுப்பு
        அரசு மேல்நிலைப் பள்ளி
        செயமங்கலம்,தேனி மாவட்டம்.



2 கருத்துகள்: