வியாழன், 17 டிசம்பர், 2015

பூமித் தாய் - கவிதை : க. சரவணன்

     பூமித் தாய்                                
                         :       க. சரவணன்

அழகாய்ப் பிறப்பெடுத்து
அற்புத வளங்களைப் படைத்தளித்து
நுண்ணுயிர் வாழ்க்கைக்கும்
நூதனமாய் வழிவிட்ட
பூமகளே...

உன் விரல் பட்டும்
இனிய இதழ் பட்டும்
இனிமை வாழ்வைப்
பெறுகிறோம் நாங்கள்.

இருப்பினும்

அரவணைத்துக் காப்பவளை
அழிய வைக்கும் நிலை
ஏனோ தொடர்கிறது.

மனிதர்கள்
ஒரு கனம் யோசித்தால்கூட
உய்வு பெறுவாய்
பூமித் தாயே!

 க. சரவணன்
  இளம் அறிவியல்- வேதியியல்
  தேனி கலை அறிவியல் கல்லூரி
  வீரபாண்டி, தேனி.

2 கருத்துகள்: