திங்கள், 13 செப்டம்பர், 2021

புத்தகம் - கவிதை : அ.ம.அகரன் தமிழீழன்


உன் நிழல் பயணத்தில்
முள் பாதையும் 
மலர்ப் பாதையாகும்.

உன்னோடு பயணம் செய்தால்
நாடி நரம்புகள் துள்ளும்.

உன் எழுத்துயிர் பிடித்தால்
மேதைகள் ஆக்கும்.
மனிதர்களை மேதைகளாக்கி இப்பூவுலகையும் மயக்கும்.

உன் உயிர் ஞானத்தால்
இந்த ஞாலமும் 
பூச்சூடிக் கொள்கிறது.

உன்னைச் சுவாசிக்காதவர்கள்
உலகில் நிலைத்ததில்லை.

காகிதப்பூ மணக்காதென்பர்.
நீயும் காகிதம்தான்
மனதுக்குள் எப்போதும்
மணத்திருக்கிறாய்.

உன்னை வாசித்துச் 
சுவாசிப்போரது மனம்
வானமாய் விரிகிறது.

அ.ம.அகரன் தமிழீழன்.



12 கருத்துகள்:

  1. கடைசி 2 பத்தி மிக அருமை. வாழ்த்துகள் தம்பி. தொடரட்டும் உமது கவிப்பணி💐💐

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை... கவிதையில் கவிஞனின் நேசம் சுவாசம் கொள்கிறது... வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  3. இளையப்பாவலன் அகரன் தமிழீழனின் கீறல்கள் அழகாகவும் மென்மையாகவும் உள்ளது.
    தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. வாழ்த்துகளால் தம்பியை வளர்த்தெடுங்கள்

      நீக்கு