வேர் மௌனத்தின் ஆரவாரம் கிளைகளும் கனிகளும்.
மௌனமும் ஆரவாரமும் கலந்த அர்த்தநாரி நான்.
அறம் செய்பவன்
அராஜகம் செய்பவன் என்று
சனாதனம் பார்த்ததில்லை.
வந்தவனை
மெத்தப் புகழ்ந்ததுமில்லை;
வெட்டியவனை
வசை பாடியமிதுல்லை.
மனிதம் மரத்துப் போனதால்
மரித்துக் கொண்டிருக்கும்
மண்ணிசை நான்.
மண்ணிசை மரித்துவிடாதிருக்க உயிர்த்தெழு மனிதமே!
-கல்பனா சாகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக